எப்படியும் ஒட்டிக்கொண்டு விடுகிறது
தொலைபேசியில் நீ கொடுத்த முத்தம்
உன்னை அழைக்கும் ஒவ்வொரு முறையும்
எண்களை ஒற்றி எடுக்கிறேன் என் விரல்காளால்
உன் குரல் கேட்ட
எல்லா தொலைபேசிகளையும்
சேகரித்து வைத்துள்ளேன்
நான் நினைக்கையில் நீ அழைக்கிறாயா
நீ அழைக்கையில் நான் நினைக்கிறேனா
உன் நினைவு வாட்டும் போதெல்லாம்
அருமருந்து உன் தொலைபேசி அழைப்பு
நீ தொலைவில் இருக்கிறாயா
அருகில் இருக்கிறாயா என்பதிலில்லை பிரச்னை
என்னை தொடர்புகொள்ளாமல் இருந்துவிட்டால்தான்
காதல் அதிர்வை உணரமுடிகிறது
ரயில் வண்டி சென்றபின்னும்
அதிரும் தண்டவாளத்தை போல
ஒவ்வொரு முறையும் நாம்
தொலை பேசி முடிக்கும் போதெல்லாம்
என் இதயத்தில் ……
நீ தொலைபேசியில் முத்தம் கொடுக்கும்போதெல்லாம்
காற்றில் மின்காந்த அலைகளெல்லாம்
முத்தகாந்த அலைகளாக மாறிவிடுகிறது