Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

ஒரு பக்கம் நிலப்பரப்பு
மூன்று பக்கம் கடல்
தீபகர்ப்பம்
நாலா புறமும் கடல்
தீவு
…நீர் இல்லை என்றால்
பாலைவனம்
பசுமை போர்த்தி இருந்தால்
சோலைவனம்
பூக்கள் பூத்து குலுங்கினால்
நந்தவனம்
நிலம் உயர்ந்து இருந்தால்
மலை
இதயம் துடித்தால்
உயிர்
அதுவே அழுதால்
காதல்

Advertisements

 

எத்தனை வலிமையை கொண்டிருந்தாலும்

அத்தனையும் பலமிழந்து விடுகிறது

ஒரு முத்தத்தில்

அல்லது

சிறு கண்ணீர் துளியில்

 

இரண்டுமே லேசானது ஆனால்

அதன் தாக்கத்தின் அடர்த்தியில் வெளிப்படுகிறது

எனது வலிமையின் பலவீனம் …

 

பலவீனத்தை வெளிகாட்டுவது

கோழைத்தனம் என்று அஞ்சினாலும்

வீரம் சாதிப்பதை காட்டிலும்

அதிகம் சாதித்து விடுகிறது பலவீனம்

 

யாருமற்ற நேரங்களில்

காலில் விலவைக்கிறது

பலத்தை காட்டியபின்பு

 

இது அதிகாரத்திற்கும் காமத்திற்கும்

நடக்கும் சண்டையாகவும் இருக்கலாம்

அல்லது காரியம் சாதிப்பதற்குபயன்படும்

ஆயுதமாக இருக்காலம்

 

முடிவில்

காயங்களும் இழப்புகளும்

மறக்கப்பட்டு

விட்டு கொடுப்பதும்

விட்டு விலகாமல்

நிலைத்திருப்பதிலும் அடங்கியிருகிறது

எனது காதலும் உனது ஊடலும்

உன்னையும் என்னையும் இணைக்க
ஒரு பிரத்யோக பாலம்தான் உதட்டு முத்தம்

இரண்டு சென்டிமீட்டர் தான் நீளம் ஆனால்
என்னை புதைத்து விடுகிறது உன் செவ்விதழ்கள்
முத்தம் எனும் பெயரால்

இது கொஞ்சம் அதிகம் தான்
ஆனால் புகார்களை பகிரங்க படுத்த வேண்டுமே ……..

இறுக்கி அனைத்து முத்தம் கொடுக்கும்போதெல்லாம்
என் நெஞ்சில் காயங்கள்
…கூரான உன் மார்புகளால்
முத்தம் எனும் மயக்க மருந்து கொடுத்து
நெஞ்சோடு நெஞ்சு கலக்கிறாய் நீ
இதற்க்கு பெயர்தான் காதல் அறுவைசிகிச்சையோ

 

உன்னை அழகிஎன்றால்
அழகெல்லாம் என்ன சொல்லி அழைப்பது ?…
சரி உன்னை பேரழகி என சொல்லிவிடலாம்
அதுவும் சரி வராது
பேரழகு என்பது எல்லாம் வெறும் பெயரளவில் தான்
உன் அளவில் அழகு என்பதற்கு அலகு
உன் முகம் மட்டும் தான்

நல்லவேளை அர்ச்சுனனின் வில்
உன் புருவங்களை போல் இல்லை
அப்படி மட்டும் இருந்திருந்தால் அவனை காண்டிபன் என்று சொல்லி இருக்க மாட்டார்கள்
“——” என்று பெயர்பெற்று இருப்பன்

கண்ணிரண்டை காணும் போதெல்லாம்
கொஞ்சம் ஆடித்தான் போகிறேன்
திராட்சைரசம் ஊரிகொண்டுருகிறது பருகாமலே போதையேற்ற

முக்கிய பிரமுகர்களிடம்
சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களிடம்
சினிமா நட்சத்திரங்களிடம்
விளையாட்டு வீரர்களிடம்
முன்மாதிரி ஆளுமைகளிடம் கையெப்பம் வாங்கலாம்
உன்னிடம் ” இதழ் ஒப்பம் ” வாங்கிடவேண்டும்

நிலவில்
மேடு உண்டு
பள்ளம் உண்டு
உன் அகத்தில் அறிவு தெளிவு நன்னடத்தை
உண்டென்பதை வட்டவடிவ முகம் காட்டுகிறது.

உன் கழுத்தை எல்லாம்
சங்கு கழுத்து என்று மறந்தும் உளறிவிடமாட்டேன்
சங்கிற்கு எல்லாம் இது உன் போல் வனப்பு

கொஞ்சம் கீழே பார்த்தல்
அப்பப்பா ………….
கொங்கைகள் இல்லை இல்லை
மலை சிகரங்கள் கூட உணருகில்
சிறு மேடுதான்

உன் இடைபார்த்தால்
யாவருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்
எனக்கு கூடவே கொஞ்சம் சபிக்கவும் வர செய்ததது
உன் நாட்டில் சீக்கிரமே உணவு பஞ்சம் தீரவேண்டும் என்று

 

அப்போதெல்லாம் தெரிந்திருக்கவில்லை
வாழ்கை நாடகத்தில் மரணத்தின் ஒத்திகை
நடக்கிறது என்று

ஒரு சுபயோக சுபதினத்தில்
இன்னார் மகன் இவருக்கும்
இன்னார் மகள் உனக்கும்
பெரியோர்களால் நிச்சியக்கப்பட்டு
நடைபெறபோகும் திருமண நிகழ்வை சுட்டிய
அழைப்பிதழ் எனது பாத்திரத்தின்
உச்சகாட்சி நிறைவுற இருப்பதாய் நினைவூட்டியது

இருந்தேன் எப்படியோ வளர்ந்தேன்
இப்படியே இருந்துவிடுவேன்
கன நேரத்தில் மாற்றிவிட்டது
உன் நட்பு
இப்போதுமுதல் உன் இதயத்தில்
வசிக்கும் வாய்ப்பை தந்துவிட்டாய்

வரமென்றால் தெய்வம்தருவதன்று
உன்னைப்போல் அன்புநெஞ்சம் தருவது
உணர்ந்துகொண்டேன் இப்போது

வெறும் நிலவல்ல நீ என்னை
அக்கறையாய் நட்புகொண்ட
சர்க்கரை நிலவு

சர்க்கரை கரைந்து போகுமே
அனால் உன் அக்கறை என்றும் கரையாது
நாம் நட்”பால்” இரண்டரகலந்தவர்கள்
எதிர் வரும் காலம்
நமக்குள் சண்டைகளையும்
சச்சரவுகளை கொண்டுவந்தாலும் கொண்டுவரலாம்
காலம் கூட பொறமை கொள்ளலாம் நம் நடப்பை பார்த்து

காதல் ஒவ்வொரு நெஞ்சிலும் பூக்கும்
நட்ப்பு நமைபோல் ஒரு சில நெஞ்சங்களில்
பூப்பதில்லை நேராக கனிந்து விடுகிறது

முதலில் உன்னை கண்டபோது
மற்றும் ஒருவர் என்றிருந்தேன்
பின் நீ முகம் காட்டி என்னில் இருக்கும் மற்ற ஒருவன் நீ
என்று அகத்தில் காட்டி விட்டாய்

உன் வயதையும் என் வயதையும்
கூட்டினால் வரும் நாம் இழந்த நட்புக்காலம்
கவலை வேண்டாம் எட்டி விடலாம் நம்நட்பின் வயது நூறு

உன் உடல் பார்க்க ஆசைப்படுவது காமம்
உன் அகம் பார்க்க ஆசைபடுகிறது என் நட்பு

ஆடை களைந்தால் காமம் வளர்க்கலாம்
ஆணால் நாம் ஆணவம் ( ego ) களைவோம்
நட்பு வளர்க்க


ஒவ்வொரு நாளும்
மெருகேறும் உன் அழகு பார்த்து
தண்ணீரில் தான் குளிக்கிறாயா
என சந்தேகம் திட்டதே
நீ குளிப்பதை எட்டிபார்த்திடவேண்டும் …

நீ நுரைத்து கரைத்துவிடும்
சோப்பின் குமில்மொட்டுக்கள்
பலவர்ணம்காட்டி பட்டென வெடித்து மலர்கிறது
உன் வீட்டு கழிவுநீர் இல்லை இல்லை
அழகு நீர் கால்வாயில்
அழுக்கை கரைக்க வந்த நான்
அழகை கரைத்து வருகிறேனென்று

சட்டென சாரல் மழை தோன்றுகிறது
உன் கூந்தல் காட்டிலிருந்து
குளித்து விட்டு கேசம்
உலர்த்தும் உன் அழகில்

வெகுநாளைய சந்தேகம்மொன்று
தீர்ந்தது நேற்று கரைத்துவிடும் உன் அழகில்
கழுத்து சங்கலி மெருகு போட்டுகொள்கிறது

அடுத்த ஜென்மத்தில்
உன் வீட்டு குளியலரையாக பிறந்துவிடுகிறேன்
கரைந்து வழிந்தோடும் நின்அழகை கண்டுரசிக்க