Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஈழம் எனது பார்வையில்’ Category

குண்டுதீய்த்த உடுப்பு
என் உறுப்பை காட்டுவதால்
இரண்டு கால் நாய்களின்
கிளர்ந்தெழுந்த உறுப்புகள்
எனைபுணர வருகிறது ………….

பிணம் புணரும் நாய்களினம்
எனை தீண்டுமுன்
உடுப்பு ஒன்று தாருங்கள் ….

காமமே கண்ணாக
கடமை முடிக்குமுன்
என் உடலை கருக்குங்கள்…

கன்னியாய் பிணமானேன்
கற்ப்பிழந்து புதைவேனோ
கண்ணிருந்தால் காப்பாற்றுங்கள்

Advertisements

Read Full Post »

என் சிற்றன்னை
வீட்டில் சாவு
அள்ளி அனைத்து ஆறுதல்
சொல்ல கரம் தரமுடியவில்லை
அன்னை வீட்டில் இருந்து

முத்தமிடும் கைகள் வேண்டாம்
முரட்டுத்தனத்தை
தடுக்கும் கரமவது கொடுக்க
நினைக்கிறன்

பங்காளிக்கு பாகம்
பிரித்து தந்த பெரிய வீட்டில்
இருந்தும் என் சிற்றனை வீட்டின்
சாவுக்கு கண்ணீர் சிந்த முடியவில்லை

ஊரும் உறவும் பார்த்து
கொண்டுஇருகையில்
பாடை கட்டி போகுது
பாவி சனம்
பரிதவிக்கும் மனம் இருந்தும்
பங்குகொள்ள முடியவில்லை

உதவி செய்ய யாரும் இல்லை
சருகாகும் உறவுக்கு
சான்றோரே சண்டை
நிறுத்த சத்தமாவது கொடேன்
என் அன்னை வீட்டில் இருந்து

எட்டி உதிக்கும் கால்களை
கட்டிபோட திராணி இருந்தும்
கைகொடுக்க மறுப்பதேன்

Read Full Post »

ஷெல் அடிக்கும்
சத்தங்களுடன்
என் குழந்தைகளுடன்
உறங்கி கொண்டுஇருபேன்

சிங்கள வெறியர்கள்
கதவை உடைத்து
என் சந்ததியை என்
கண்முன்னால் கொன்று
எறிவார்கள்

கொண்டவனை சுட்டு
வீழ்த்துவார்கள்
கடைசியாய் என்னை
கசக்கி பிழிவார்கள்
மார்பை அறுத்து
எறிவார்கள் பிறப்புறுப்பில்
வேடிவேடிப்பர்கள்
இதனை கூட பொறுத்துக்கொள்ள
துடிக்கிறேன்

ஆனால் எங்களின் நிலை
கண்டு உதவி செய்யாமல்
கேடுகெட்ட அரசியல் பேசி
உன் சுயலாபம் அடைய
பார்க்கும் உண் என்னத்தை
கண்டால் இன்னும் பல
முறை செத்துவிட தோனுகிறது

Read Full Post »

கதிர்காமன் என்பது
சிங்களராணுவம்
கொன்ற என் தந்தை எனக்கு
வைத்த பெயர்

நான் பள்ளி சென்றது இல்லை
புத்தகம் சுமந்து இல்லை
பாடம் படித்தது இல்லை
கழுத்தில் டை கட்டியது இல்லை
என் வயதொத்த சிறுவர்களுடன்
உங்களை போல் விளையாடியது இல்லை

மாறாக உங்களுக்கு தெரியாத
எனக்கு புரியாத புரட்சி
படித்துக்கொண்டு இருக்கிறேன்
துப்பாக்கி தூக்குகிறேன்
குண்டு வீசுவேன்
பதுங்கி பாயும் கொரில்லா
போர் பயின்று இருக்கிறேன்
கழுத்தில் சயனைடு குப்பி
அணிந்து கம்பிரமாக வலம்
வருகிறேன் ஏன் என்ற
காரணம் எனக்கு தெரியாது

என் இயக்கம்
எனக்கு வழங்கிய பெயர்
போராளி

என் இஷ்டப்பட்டு
வரவில்லை கஷ்டப்பட்டு
என் கனவுகளை தொலைத்ததுதான்
வந்திருக்கிறேன்

கடைசியில் என் இனமாவது
இந்த துன்பங்களில் இருந்து
மீளவேண்டும் என்பதற்காக

எனக்கு தெரியவில்லை ஆயுதம்
ஏந்தியதால் தான் என் இனம்
அழிக்கப்படுகிறதா என்று

என் தலைவனனுகவது
தெரியுமா என் இனம்
எப்போது தலைக்கும் என்பது
என் போன்ற சிறுவர்களை
பள்ளிக்கு அனுப்பும் காலம் வருமா என்று
யாராவது கேட்டு சொல்லுங்களேன்
என் பின் வரும் சந்ததியாவது
அமைதியாய் வாழுமா ?.

Read Full Post »