நீ என்று நானும்
நான் என்று நீயும்
யார் முதலில் என்று காத்திருக்கிறோம்
எங்கோ யாரோ எவரையோ எதற்கோ
உன்னை நினைவூட்டிக்கொண்டே
அந்நினைவுகளில் உன்னையாரேனும் நினைவூட்டமாட்ட்ர்களா
என்று நானும் அவ்வாறே நீயும்
நினைவூட்ட
காத்திருக்கிறோம்
எதோ ஒரு நீண்ட வரிசை
யார் யாரோ நின்று காத்திருகிறார்கள்
எதனையோ பெறுவதற்கோ அல்லது தருவதற்கோ
அந்த வரிசையில் நான்
அதே போல நீயும் அங்கே எதோ ஒரு வரிசையில்
உன்னை நானும் என்னை நீயும்
தருவதற்கும் பெறுவதற்கும்
காத்திருக்கிறோம்
வேலைக்கான உத்தரவிற்கு ஒருவன்
காத்திருக்கிறான் என்று அறிந்து
அவனுடன் நான் காத்திருந்தேன்
உன் உத்திரவு வரலாமோ என்று
அங்கே நீயும் அவ்வாறே ….
எனக்காக நீயும் உணக்க நானும்
காத்திருக்கிறோம் ஆனால்
நமக்காக காத்திருக்கவும் இரண்டு பொருள் உண்டு
உனது எனது அலைபேசி
காரணம் கேட்டால் வெட்கப்பட்டு ஒளிர்கிறது
உங்கள் காதல் அழைப்பின் போதெல்லாம்
நாங்கள் காதல் தூதுவர்கள் என்று
so sweet poem gana….
kavithai is very nice. and very usefull my love.
its very nice