Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2010

என்றாவது ஒரு காதலி கிடைப்பாள

என்று பல வருடங்கள்

காத்திருந்த காலங்கள் உண்டு

விதவிதமாய் பெண்கள்

எனது வாழ்க்கை பக்கங்களை

நிரப்பி போய்இருக்கிறார்கள்

சிலர் தோழியாக வெகு

சிலர் தொல்லைகளாக

பலர் அழகால்

சிலர் அறிவால் மயக்கியதுண்டு

ஆனாலும் காதலி என்று

யாரும்இருந்ததில்லை அதுவரை ………

இனி காதலி என்றாலே

அவள் ஒருத்தி என்று நம்பியது

இறந்தகாலம் எவரும் காதலி ஆகலாம்  என்பது

எதிர்காலமாக இருக்கலாம்

நிகழ்காலத்தில் வெறுமை

ஒவ்வொரு திருமணத்திலும்

எவர்எவரோ அவரவர் காதலன் காதலியை

இழக்கிறார்கள் வேறொருவரின் காதலன் காதலியை

அடைகிறார்கள் கணவன் மனைவி எனும் பெயரில்

எல்லா காதல்களும்

இரட்டை வாழ்க்கை வாழ்கிறது

மனதில் ஒன்று மடியில் ஒன்று என அல்லது

கைவிட்ட ஒருதலை காதலை எண்ணி

ஒரு காதல் ஒருபோதும் இல்லை

ஒவ்வொருபருவத்திலும் ஒருஒரு காதல்

விரும்பியோ விரும்பாமலோ

அரும்பிவிடுகிறது

இனி என் அடுத்த காதலுக்கு நிச்சியம்

காத்திருக்கலாம்

காதல் ஒருபோதும் முடிவதில்லை

Advertisements

Read Full Post »

ஒரு பக்கம் நிலப்பரப்பு
மூன்று பக்கம் கடல்
தீபகர்ப்பம்
நாலா புறமும் கடல்
தீவு
…நீர் இல்லை என்றால்
பாலைவனம்
பசுமை போர்த்தி இருந்தால்
சோலைவனம்
பூக்கள் பூத்து குலுங்கினால்
நந்தவனம்
நிலம் உயர்ந்து இருந்தால்
மலை
இதயம் துடித்தால்
உயிர்
அதுவே அழுதால்
காதல்

Read Full Post »

 

எத்தனை வலிமையை கொண்டிருந்தாலும்

அத்தனையும் பலமிழந்து விடுகிறது

ஒரு முத்தத்தில்

அல்லது

சிறு கண்ணீர் துளியில்

 

இரண்டுமே லேசானது ஆனால்

அதன் தாக்கத்தின் அடர்த்தியில் வெளிப்படுகிறது

எனது வலிமையின் பலவீனம் …

 

பலவீனத்தை வெளிகாட்டுவது

கோழைத்தனம் என்று அஞ்சினாலும்

வீரம் சாதிப்பதை காட்டிலும்

அதிகம் சாதித்து விடுகிறது பலவீனம்

 

யாருமற்ற நேரங்களில்

காலில் விலவைக்கிறது

பலத்தை காட்டியபின்பு

 

இது அதிகாரத்திற்கும் காமத்திற்கும்

நடக்கும் சண்டையாகவும் இருக்கலாம்

அல்லது காரியம் சாதிப்பதற்குபயன்படும்

ஆயுதமாக இருக்காலம்

 

முடிவில்

காயங்களும் இழப்புகளும்

மறக்கப்பட்டு

விட்டு கொடுப்பதும்

விட்டு விலகாமல்

நிலைத்திருப்பதிலும் அடங்கியிருகிறது

எனது காதலும் உனது ஊடலும்

Read Full Post »

உன்னையும் என்னையும் இணைக்க
ஒரு பிரத்யோக பாலம்தான் உதட்டு முத்தம்

இரண்டு சென்டிமீட்டர் தான் நீளம் ஆனால்
என்னை புதைத்து விடுகிறது உன் செவ்விதழ்கள்
முத்தம் எனும் பெயரால்

இது கொஞ்சம் அதிகம் தான்
ஆனால் புகார்களை பகிரங்க படுத்த வேண்டுமே ……..

இறுக்கி அனைத்து முத்தம் கொடுக்கும்போதெல்லாம்
என் நெஞ்சில் காயங்கள்
…கூரான உன் மார்புகளால்
முத்தம் எனும் மயக்க மருந்து கொடுத்து
நெஞ்சோடு நெஞ்சு கலக்கிறாய் நீ
இதற்க்கு பெயர்தான் காதல் அறுவைசிகிச்சையோ

Read Full Post »

 

உன்னை அழகிஎன்றால்
அழகெல்லாம் என்ன சொல்லி அழைப்பது ?…
சரி உன்னை பேரழகி என சொல்லிவிடலாம்
அதுவும் சரி வராது
பேரழகு என்பது எல்லாம் வெறும் பெயரளவில் தான்
உன் அளவில் அழகு என்பதற்கு அலகு
உன் முகம் மட்டும் தான்

நல்லவேளை அர்ச்சுனனின் வில்
உன் புருவங்களை போல் இல்லை
அப்படி மட்டும் இருந்திருந்தால் அவனை காண்டிபன் என்று சொல்லி இருக்க மாட்டார்கள்
“——” என்று பெயர்பெற்று இருப்பன்

கண்ணிரண்டை காணும் போதெல்லாம்
கொஞ்சம் ஆடித்தான் போகிறேன்
திராட்சைரசம் ஊரிகொண்டுருகிறது பருகாமலே போதையேற்ற

முக்கிய பிரமுகர்களிடம்
சமூக அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களிடம்
சினிமா நட்சத்திரங்களிடம்
விளையாட்டு வீரர்களிடம்
முன்மாதிரி ஆளுமைகளிடம் கையெப்பம் வாங்கலாம்
உன்னிடம் ” இதழ் ஒப்பம் ” வாங்கிடவேண்டும்

நிலவில்
மேடு உண்டு
பள்ளம் உண்டு
உன் அகத்தில் அறிவு தெளிவு நன்னடத்தை
உண்டென்பதை வட்டவடிவ முகம் காட்டுகிறது.

உன் கழுத்தை எல்லாம்
சங்கு கழுத்து என்று மறந்தும் உளறிவிடமாட்டேன்
சங்கிற்கு எல்லாம் இது உன் போல் வனப்பு

கொஞ்சம் கீழே பார்த்தல்
அப்பப்பா ………….
கொங்கைகள் இல்லை இல்லை
மலை சிகரங்கள் கூட உணருகில்
சிறு மேடுதான்

உன் இடைபார்த்தால்
யாவருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்
எனக்கு கூடவே கொஞ்சம் சபிக்கவும் வர செய்ததது
உன் நாட்டில் சீக்கிரமே உணவு பஞ்சம் தீரவேண்டும் என்று

Read Full Post »

 

அப்போதெல்லாம் தெரிந்திருக்கவில்லை
வாழ்கை நாடகத்தில் மரணத்தின் ஒத்திகை
நடக்கிறது என்று

ஒரு சுபயோக சுபதினத்தில்
இன்னார் மகன் இவருக்கும்
இன்னார் மகள் உனக்கும்
பெரியோர்களால் நிச்சியக்கப்பட்டு
நடைபெறபோகும் திருமண நிகழ்வை சுட்டிய
அழைப்பிதழ் எனது பாத்திரத்தின்
உச்சகாட்சி நிறைவுற இருப்பதாய் நினைவூட்டியது

Read Full Post »