Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2010

இருந்தேன் எப்படியோ வளர்ந்தேன்
இப்படியே இருந்துவிடுவேன்
கன நேரத்தில் மாற்றிவிட்டது
உன் நட்பு
இப்போதுமுதல் உன் இதயத்தில்
வசிக்கும் வாய்ப்பை தந்துவிட்டாய்

வரமென்றால் தெய்வம்தருவதன்று
உன்னைப்போல் அன்புநெஞ்சம் தருவது
உணர்ந்துகொண்டேன் இப்போது

வெறும் நிலவல்ல நீ என்னை
அக்கறையாய் நட்புகொண்ட
சர்க்கரை நிலவு

சர்க்கரை கரைந்து போகுமே
அனால் உன் அக்கறை என்றும் கரையாது
நாம் நட்”பால்” இரண்டரகலந்தவர்கள்
எதிர் வரும் காலம்
நமக்குள் சண்டைகளையும்
சச்சரவுகளை கொண்டுவந்தாலும் கொண்டுவரலாம்
காலம் கூட பொறமை கொள்ளலாம் நம் நடப்பை பார்த்து

காதல் ஒவ்வொரு நெஞ்சிலும் பூக்கும்
நட்ப்பு நமைபோல் ஒரு சில நெஞ்சங்களில்
பூப்பதில்லை நேராக கனிந்து விடுகிறது

முதலில் உன்னை கண்டபோது
மற்றும் ஒருவர் என்றிருந்தேன்
பின் நீ முகம் காட்டி என்னில் இருக்கும் மற்ற ஒருவன் நீ
என்று அகத்தில் காட்டி விட்டாய்

உன் வயதையும் என் வயதையும்
கூட்டினால் வரும் நாம் இழந்த நட்புக்காலம்
கவலை வேண்டாம் எட்டி விடலாம் நம்நட்பின் வயது நூறு

உன் உடல் பார்க்க ஆசைப்படுவது காமம்
உன் அகம் பார்க்க ஆசைபடுகிறது என் நட்பு

ஆடை களைந்தால் காமம் வளர்க்கலாம்
ஆணால் நாம் ஆணவம் ( ego ) களைவோம்
நட்பு வளர்க்க

Read Full Post »