Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2010


ஒவ்வொரு நாளும்
மெருகேறும் உன் அழகு பார்த்து
தண்ணீரில் தான் குளிக்கிறாயா
என சந்தேகம் திட்டதே
நீ குளிப்பதை எட்டிபார்த்திடவேண்டும் …

நீ நுரைத்து கரைத்துவிடும்
சோப்பின் குமில்மொட்டுக்கள்
பலவர்ணம்காட்டி பட்டென வெடித்து மலர்கிறது
உன் வீட்டு கழிவுநீர் இல்லை இல்லை
அழகு நீர் கால்வாயில்
அழுக்கை கரைக்க வந்த நான்
அழகை கரைத்து வருகிறேனென்று

சட்டென சாரல் மழை தோன்றுகிறது
உன் கூந்தல் காட்டிலிருந்து
குளித்து விட்டு கேசம்
உலர்த்தும் உன் அழகில்

வெகுநாளைய சந்தேகம்மொன்று
தீர்ந்தது நேற்று கரைத்துவிடும் உன் அழகில்
கழுத்து சங்கலி மெருகு போட்டுகொள்கிறது

அடுத்த ஜென்மத்தில்
உன் வீட்டு குளியலரையாக பிறந்துவிடுகிறேன்
கரைந்து வழிந்தோடும் நின்அழகை கண்டுரசிக்க

Read Full Post »

தாய் பசு தேடியகன்று
வழிதவறிய ஆடு
பாலுக்கு அழும் குழந்தை
இவற்றின்
ஏக்கங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல

வழி மறந்த காட்டுபாதை
கரைதெரியாத கட்டுமரம்
தவற விட்ட ரயில்
பாதி பயணத்தில் நான்

நுனிப்புல் பனித்துளி
கருமேகம் சிந்திய முதல்துளி
கரை ஏறிய அலைத்துளி
எங்கே போனதோ அங்கே போனாயா

Read Full Post »

பூக்கூடை சுமந்துவந்தவனிடம்
பூவாங்கி தலைசூடி போனாய்
எங்கிருந்தோ பறந்துவந்த பட்டாம்பூச்சிக்கு குழப்பம்
பெரும் சுமையை சுமந்தவன்
இறக்கிவைத்தை போல பூக்கரனின் முகம்
பறிக்கப்பட்டது மீண்டும்
அதனிண்டத்திற்கே திரும்பியதை போல் பூ
இதனை அறியாத நீ …
எனக்கோ படபடப்பு எங்கே பட்டாம்பூச்சி
தேனெடுக்க உன் இதழில் வந்தமாறுமோவென்று
எட்டநின்று பார்த்திருந்தேன் வேறதுவும் கவனியாமல்….

Read Full Post »