Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2010

ஊரிலிருந்து வந்த தாத்த பாட்டி
பள்ளிசெல்லும் பையில் ரப்பர் பந்து
இருசக்கர வாகனத்தில்
சகோதரி சொருகிவைத்த செம்பருத்தி
நேர்முக தேர்வு செல்கையில் அம்மா
நெற்றியில் இட்ட திருநீர்
சுற்றுலாவிற்கு வேண்டா வெறுப்பாய்
அனுமதித்து பின் சட்டைபையில் அப்பா
வைத்துவிட்ட பணம்
சந்தித்து பின் விடைபெறும்
சமையத்தில் காதலி தந்த முத்தத்தின் ஈரம்
அவசரமாய் கிளம்புகையில்
ஆசையாய் கையசைக்கும் எதிர்வீட்டு குழந்தை
அதற்கு கொடுத்த பறக்கும் முத்தம்
வருடம் தோறும் வரும்
பிறந்தநாளுக்கு மறவாமல் வாழ்த்து அனுப்பும்
என்றோ சந்தித்த நட்பு
தினசரி போய்வரும் பாதையில்
வார்த்தைகள் பேசாமல் எப்போதும்
தலையசைத்து வழியனுப்பும் யாரோ ஒருவர்
ராசியான சட்டை என்று நம்பிக்கையுடன்
நண்பன் அணிவித்த அவனின் மேல் சட்டை
அன்பு எனப்படுவது
எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறது
எதாவது ஒன்றின் மீது ஒட்டிக்கொண்டு
Advertisements

Read Full Post »

 

அடுக்கடுக்கான கட்டிடங்களும்
நெரிசல் மிகு போக்குவரத்திலும்
நுழைந்து வெளியேறி
உணவகங்களில் அரக்கபரக்க உண்டு
காணக்கிடைக்கும் தேநீர் விடுதிகளிலெல்லாம்
சிறுபசியாரி புகைத்து
இரவுக்கும் பகலுக்கும்
வேறுபாடு மறந்து துயில்கொண்டு
சமகாலத்தின் நிர்பந்தங்களின்மேல்
கோவமுற்று
கதை கவிதைகளின்
புனைவுகளை சிலாகித்து அதன் மகிழ்வில் ஓய்வெடுத்து
கடனும் காமமும் துரத்த
இன்றைய நாளையை சிந்தித்து
நாளைய இன்றையை கோட்டைவிட்டு
ஓடிகொண்டிருப்பவன்

Read Full Post »

நீண்ட பிரிவுகாலத்தின் பின்
நிகழ்ந்தது நம் சந்திப்பு
ஏதேதோ பேசிகொண்டோம்
உதட்டசைவின் ஓசைகளினால்
ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தோம்
உள்ளத்தின் மௌனங்களினால்
காதல் மொழி பேசி நின்றாலும்
கண்ணீரில் கரைந்தாலும் நான் நிற்க்கபோவதில்லைஎன்று
அவரவர் இல்லம் திரும்பும் நேரத்தை உணர்த்தியது காலம்
அலைபேசியில் குறுந்தகவல் ஒன்று
“ஏனோ இடைவெளி நமக்குள்”
உணர்கிறேனென்று .
ஆம்
உனக்கும் எனக்கும்
இடையில் உள்ள வெளியில்
பெரிய இடைவெளி உள்ளது
அதனை காதலிட்டு நிரப்பிக்கொண்டு இருக்கிறது
நம் இத்தனை நாள் பிரிவு

Read Full Post »

வானத்து மேகமாய்
வண்ணங்களை காட்டி
களைந்து சென்றது காதல்

சுட்டெரிக்கும் வாழ்க்கையில்
மேகம் தரும் நிழலாய் நீ
நிழல் கரைந்தது நிஜம் சுடுகிறது

அடிவானத்து மேகம் பார்க்குபோது
நீயும் நானும் கொஞ்சி விளையாடிய
வெட்கத்தின் சாயம் பூசிகொண்டதே எனதோணும்

மேகமும் காதலும் ஒன்றென தெரியாது
ஆனால் நீயும் காதலும் ஒன்றென தெரியும்
மேகம் மழை கொடுத்து கரையும்
நீ காதல் கொடுத்து காணமல் போகிறாய்

மேகம் கொடுத்த மழை
மண்வாசம் விட்டு செல்லும்
நீ கொடுத்த காதல் – என் உயிரை
எடுத்துசென்றதா கொடுத்து சென்றதா ?..

நிழல் கொடுக்கும் வான்மேகம்
காதல் கொடுக்கும் உன் வனப்பு
வெண்பஞ்சு பட்டுடுத்தி சுட்டெரிக்கும்
சூரியன் போல் என் இறுதிஊர்வலத்திற்கு
உடுத்திவருவாயோ கார்முகிலை கனகட்சிதமாக

Read Full Post »

பிறிதொரு நாள் பிரிவின்போதில் கைகுளுக்கிகொளோம்
மீண்டும் சந்திக்கலாம் என்று

யாரோருவரை யார் பிரிந்தாலும்
வருதப்படாதிர்கள் மகிழ்ச்சியடையுங்கள்
உறவுகள் மட்டுமல்ல பிரிகின்றயாவும்
வேறு யாருடனோ எவையுடனே சேருகின்றன

வலிக்கிறதென்று அஞ்சதிர்கள்
தெரிந்தேதான் பிரிவு வருகிறது
எந்த ஒரு பிரிவையும் தவிர்க்க முடியாது

பாசத்தை நேசத்தை பாதியில்
பிரிப்பதில்லை இங்கே பிரிந்து
அங்கே கூட்டுவைதுகொள்கிறது
வேறு ஒரு பிரிவின் பிரிவிற்காக

நிரந்தரமான பிரிவு எனஒன்றுமேயில்லை
பிறிதொரு சேர்க்கையின் அஸ்திவாரமே
இப்போதைய பிரிவு அதனை ஏற்றுகொள்ளுங்கள்

நம் நிழலே நமை பிரியும் – இருட்டில்
நம் நேசங்களும் பாசங்களுமட்டுமென்ன விதிவிலக்கா ?
பிரிவென்பது சமன்பாடு
பிரிவென்பது சூத்திரம்
பிரிவென்பது இயங்கியல்
பிரிவென்பது தேற்றம்
மேலாக பிரிவென்பது சேர்ந்துகொள்ளபோவது

ஆகவே பிரிவின் போது கைகுளுகிகொள்வோம்
மற்றொரு சேர்தலுக்கும்
மற்றொரு பிரிதலுக்கும்

பிறிதொரு நாள் பிரிவின்போதில் கைகுளுக்கிகொளோம்
மீண்டும் சந்திக்கலாம் என்று காரணம்
எப்போதும் மிச்சம் இருப்பது பிரிவோன்றுதான்

Read Full Post »