Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மார்ச், 2010

எங்கேயும் எப்போதும்
எதிலும் எல்லாருக்கும்
படபடப்பு அவதி அவசரம்

எதனை துரத்துகிறார்களோ
எவரின் முகத்திலும்
சந்தோஷ ரேகைகளை காணமுடிவதில்லை
மாறாக அவசரம் படபடப்பு அவதி

அவசர ஊர்திக்கு கூட
வழிகொடுக்காவண்ணம்
முன்னாள் செல்லும் அவதி

கொஞ்சம் முன்னமே சென்றுவிட்டால்
அலுவலகத்தில் அவதி இல்லாமல் இருக்கலாமே
வாகனத்தின் இயக்குவிசையை
உந்திதள்ளியபடி வாகன ஓட்டி

காலம் கடந்துவிடுமே
மாலை நேர தொலைக்காட்சி நிரல்
பேருந்தின் ஜன்னலோரபென்னின்
படபடப்பு

சாலைகடக்கும்போது
கவனம் இல்லை
அவதியும் அவசரமும் ஊர்ந்துசெல்லும்
முகங்கள்

மதிய உணவைக்கூட
துரித உணவாக உட்கொள்ளும்
ஆசாமிகளை பார்க்கும்போதெல்லாம்

நகைப்பு என்ன அவசரம் இவர்களுக்கு என்று

தேநீர் அருந்தியவாறே
நிதானமாக அமர்ந்து
சிந்தனை செய்துகொண்டு இருந்தேன்
நகைப்பு என்ன அவசரம் இவர்களுக்கு என்று
சற்று தொலைவில் நீ

அவதியும் அவசரமும்
என்னையும் தொற்றிக்கொள்ள
படபடப்புடன்
சேர்ந்தேன் உன் நிழலிடம்

Read Full Post »

கரையும் எதுவும்
என் இதயத்தை போலவும்
கரைப்பதெதுவும்
உன் இதயத்தை போலவும் இல்லை

கரையும் என் இதயம்
தீர்ந்துபோவதில்லை எப்போதும்
கரைக்கும் நீயும் சமநிலையடைவதில்லை
வேதியல் வினையூக்கியாக
காதல் …

கரைக்கபடுவதும்
கரைபடுவதும் ஒரு பொருள்தன்
இதயம்

இரு வேறு பொருள்கள்தான்
கரையும் கரைக்கும்
ஒரே இருபொருள் கலக்கும்
விஞ்ஞானம்
இரு ஒரே பொருள்
கரையும் கரைக்கும்
காதல்ஞானம்

Read Full Post »