Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2009

alagu

யாரையும் திரும்பி பார்க்கவைக்கும்
அழகிகளை பார்த்திருக்கிறேன்
பார்க்கவைத்துக்கொண்டே இருக்கும் அழகி நீ

பெயரளவில் அழகிகளை பார்த்ததுண்டு
உன்னைப்போல் பேரழகியை பார்த்தது
இதுதான் முதல்முறை

அழகாய் இருக்கின்றன
என்றுகூறும் அனைத்தும்
உன்னைப்போல் அழகில்லை
ஒருவேளை நீ மட்டும்தான் அழகோ என்னவோ

எழுத்துகள் கூட உன்னைசேர்ந்தவுடன்
அழகாய் மாறியமாயம் உன் அழகிற்கேவுண்டு
உன் பெயர்எழுத்தில் உள்ள
எழுத்துக்களையெல்லாம் தனியாக
எழுதிப்பார் உனக்கே புரியும்

அழகு புத்துணர்வு தரும்
உன்னைபார்த்தபின் நான்
கண்ட உண்மை

எல்லாவற்றிக்கும் வரையறையுண்டு
உன் அழகிற்கு மட்டும்
எந்த வரையறையுமில்லை

உன் அழகிற்கு அருகில்
எந்த அழகைகொண்டுவந்தாலும்
அழகில்லாமல் போய்விடுகிறது

உன்னை நான் காதலிப்பதலோ
என்னவோ என் காதல்கூட
அழகாய் தெரிவதில்லையனக்கு

அத்தனை அழகாய்
ஒரு அழகு நீ

Advertisements

Read Full Post »

untitled
உன் இதயத்தை
தொடத்தான் முடியவில்லை
திருடகூடவா முடியாது ?…

நீ என்னைபார்க்கும்
போதெல்லாம்
இமைகள் கருப்புக்கொடி
காட்டுகின்றன

 சிப்பியிலே
இருக்கும்வரை முத்தின் மதிப்பு
தெரியாது உனக்கு முத்துப்பல்லாமே
எப்போது புன்னகைப்பாய் ?..

மூக்கின்மீது கோவத்தை
கொண்டுவரதே அதுகூட காயப்படும்
அத்தனை கூர்மை

தேன்னூரும் அல்ல அல்ல
கவிதையூறும் உதடுகள்
ஒவ்வொரு சுழிப்பும்
ஓராயிரம் கவிதைக்கு சமம்

எவன் வைத்தான்
பூனை முடியென்று
பொன்முடி காதுமடலருகில்

யாருக்குஎப்படியோ
உனக்கு ஆள்காட்டிவிரல் உன்
ஆள் நான்னென காட்டத்தான்

Read Full Post »

thayakkam

பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது
**********
என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றேனக்கும் தயக்கம்
**********
உடைந்து போன உன் வளையல்கூட
பொக்கிஷம் தான் எனக்கு
நீ உடைத்த என் இதயம்
உணகெப்படியோ
**********
நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது
*********
வெட்டி
வெட்டி போட்டாலும்
மீண்டும்
மீண்டும் முளைக்கிறது
உன் மீதான என் காதல்
உன் தயக்கமும் அப்படித்தானோ
**********
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது
*********
என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்
**********
இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
நம் காதல ? உன் தயக்கமா ?
பந்தய பொருள் என் வாழ்க்கை
*********
வெட்கம் என்றால்
களைந்து விடுவேன் – இது
தயக்கம் அல்லவா தவிக்கிறேன்
தவிர்ப்பது எப்படியென்று
*******

-இதயதிருடன்

Read Full Post »

யாருக்குமே புரிவதில்லை

பாலுணர்வு தூண்டல்களில்
பற்றிஎரிந்து பாழாய்போகிறது
இளசுகளின் இளம் நெஞ்சம்

வரவேற்ப்பு அறை வரை
வந்துவிட்டது வக்கிரம்
அதன் பராக்கிரமம் பற்றி
அக்கறை இல்லை எவருக்கும்

கல்வி நிலையங்கள்
கல்வி பயிலவா ?.. இல்லை
காமம் பயிலவா ?..
காமத்தை சந்தைப்படுத்த
இதைவிட வேறு நல்ல இடம் இன்று ஏது ?..

வினாடிகள் வீனாய்கரைய
நிமிடங்கள் நித்திரையில்
மணிகள் மரணத்தில் – கடைசியில்
நாட்கள் நாசமாய் போகிறது

யாருக்குமே புரிவதில்லை
நாசாமாய் போன நாட்கள்
வீனாய் போன வினாடிகளில்
பிறந்து அழிந்தன என்று

காம சந்தையில் விலைகொடுத்தவனால்
காலத்தை எந்த சந்தையிலும் திரும்பபெற
முடிவதேயில்லை

சமூக கிளர்சியடையவேண்டிய வயதில்
சதை கிளர்ச்சியடைந்து
கடைசியில் சுற்றிதிரிகிறார்கள்
காயடித்த நாய்களைபோல்
கல்லாய் கூட பயனற்று…

Read Full Post »

beautify31ff2
சக்கரவாகம் மழையை அருந்தும்
அன்னம் பாலை அருந்தும்
இவைகள் பறவைகளேன்றால்
உன்னை ஏன் சொல்லக்கூடாது
பறவையென்று
என் கண்ணீரை அல்லவா நீ அருந்துகிறாய்

சீதோசன நிலையோ இனப்பெருக்கமோ
கண்டம் விட்டு கண்டம் தாண்டும்
பறவைகளை போல் நான்
ஆற்றாமையும் ஆவேசமும்
வரும்போதெல்லாம் அதனை
தாண்டிவருகிறேன் உன்னிடம்
அன்பும் அரவணைப்பும் வேண்டி

பந்தய புற வலிமையானது
மாட புற பயந்தாங்கோலி
நான் வெளியிடத்தில் பந்தைய புற
உன்னிடத்தில் மாட புற

சொல்லிகொடுத்தால்
இரண்டயிரம் வார்த்தைகள் பேசுமாம்
கிரே எனும் கிளிவகை
மூன்றே மூன்று வார்த்தைகள் மட்டும்
என்னிடம் பேசு நான் சொல்லி கொடுக்கிறேன்

மைனா இனிமையாக பாடும்
ஆனால் அதற்க்கு அடைகாக்க தெரியாது
உனக்கு காதலிக்க தெரியாது
ஆனால் காதலை கொடுப்பதற்கு தெரியும்
எல்லாம் அனுபவம்தான்

பறக்க முடியாது என்பதற்காக
பென்குவினை பறவையில்லை என சொல்லுவதில்லை
காதலிக்க தெரியாத உன்னை
காதல் பறவை என்று சொல்லுவதில்
தவறொன்றுமில்லை

Read Full Post »

ithyathirudan
அம்மனுக்கு நேர்ந்துவிட்ட
பசுமாடு போல்
நான் உனக்கு
நேர்ந்துவிடபட்டவன்

அனைத்தையும் கரைத்துவிடுமாம்
கந்தக கரைசல்
உன் கண்ணீர் கரைத்த
என் வாழ்க்கையை விடவா ?..

ரசவதரம் பற்றி எல்லாம்
எதுவும் தெரியாது
ஆனால் உன் புன்னகையை
அப்படி சொன்னால் நான் மறுப்பேதும்
சொல்லாமல் எற்றுகோள்ளுவேன்

உன் இஸ்பரிசம்
ஒரு கொலைகார மருந்து
என் கவலைகளையும் துக்கங்களைம்
ஒருசேர கொன்றுவிடுகிறது

உன்னை கொல்லுகிறது
என் ஒருதலை காதல்
என்னை கொல்லுகிறது
உன்மீது நான்கொண்ட காதல்
மொத்தத்தில் நாம் காதலுக்கு
பலியாடுகள்

நீ
சிந்திய கண்ணீரை பருகியதற்கு பதில்
விஷத்தை பருகி இருக்கலாம்
இரண்டுமே ஒன்றுதான்
என்னை கொல்லும் விஷங்கள்

என்ன கண்ணீருக்கு பதில்
விஷத்தை பருகியிருந்தால்
மோட்சம் கிடைத்திருக்கும்
இப்போது காதல் நரகத்தில் சிக்கிக்கொண்டேன்

Read Full Post »

photography-the-rules-of-composition
 
என்னால் எழுதப்பட்ட
கவிதைகளைவிட
உன்னைப்படமேடுத்ததே சிறந்த
கவிதைகள்
உன்னை படமெடுக்கும்
சந்தர்ப்பங்களிலெல்லாம்
நானும் கவிஞன் தான்
  ” கமிரா கவிஞன் “
 
கவிதை இலக்கணத்தில்
புதிய பரிணாமம்
உன் ஒவ்வொருரசைவின்
புகைப்படங்கள்
 
வெவ்வேறு தளங்களில்
வெவ்வேறு வெளிகளில்
புகைப்படங்களாக நீ
பின்னனி வேறுபட்டாலும்
கவிதையாக நீ மட்டும் அப்படியே

உன் காதலைதான்
பிடிக்க முடிவதில்லை
ஆகவே தான்
புகைப்படத்தில் பிடித்துக்கொள்கிறேன்

 
காதல் தீயின்
மிச்சங்களாக
புகைப்படங்களின் நீ

 

உன்னை சுற்றி வளைத்து
எத்தனை படமெடுத்தாலும்
அலுப்பதே இல்லை எனக்கும்
என் கமிராவுக்கும்
எல்லா சதுரங்களிலும் புதுகவிதையாக நீ
 
புகைப்படம் எடுப்பது
சாதாரணம்
உன்னைப்போல் கவிதையை
புகைப்படம் எடுப்பதென்பது
அசாதாரணம்
அந்தவகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்

Read Full Post »

Older Posts »