Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2009

தெரிந்த கடவுள்

 

நீ தலை துவட்டியபின்
உன் நுனி கூந்தலிலிருந்து 
என் மீது சிந்தும் நீர் துளியின்
சிலிர்ப்பை எந்த
மழையும் தவறுவதே இல்லை 
மொட்டைமாடி நிலவில்
நனைந்துகொண்டு மின்னும் எந்த
நட்சத்திரமும்
உன் தொற்றுபல் ஊட்டும்
பரவசத்தை தருவதே இல்லை
ஆற்றங்கரையில்
நீ மஞ்சள் தேய்த்து குளிக்கிறாயா – இல்லை
உன் அழகை கரைத்து குளிக்கிறாயா
அடுத்த படித்துறையில்
குளித்த பெண்கள் தங்கம்போல்
மின்னுவதால் இந்த சந்தேகம்
உன் வீட்டு தோட்டத்திலுள்ள
மலர்களை விடுத்து
உன்னைத்தான் சுற்றுகிராதம் வண்டுகள்
இனி நீ தோட்டத்திற்கு செல்லவேண்டாம்
உன் அழகு சுற்று வட்டபாதையில்
என்னைத்தவிர யாரும் சுற்றக்கூடாது
இன்றுகூட
எனக்கும் அம்மனுக்கும் சண்டை
நீ எப்போது கோவில் வந்தாலும்
உன் பின்னால் வரும் நான்
அம்மனை வணங்காமல் உன்னைமட்டுமே
வணங்குகிறேனம்  பின்னே
நீ நடமாடும் தேவதை
எனக்கு தெரிந்த கடவுள்

Advertisements

Read Full Post »

1

 

முன்பெல்லாம் தேர் பார்க்க
திருவிழா வரும்வரை காத்திருப்பேன்

இப்போதெல்லாம் …
தினமும் தேரில் தேவதை தரிசனம்
உன் scooty தேர்
நீ தேவதை

தேரில் உள்ள அம்மன்
பக்தனை பார்ப்பதே இல்லை
பக்தன் வேண்டிகொள்ளதான் முடியும்

நீயும் தான்
ஒரு போதும் என்னை
பார்ப்பதே இல்லை
நான் உன்னை பார்ப்பதேபோதும்

அம்மனிடம் வரம்கேட்டு
வேண்டிக்கொள்ளும் பக்த்தனுக்கு
வேண்டியது கிடைக்கிறதா என்ன ?..

எதற்கும் இருக்கட்டும்
நான் என் தேவதையிடம் கேட்டுவைக்கிறேன்
முத்தம் ஒன்று கொடுத்து
என் பார்வையை முழுமையடைய செய்யேன்…

Read Full Post »