Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2009

love-gone

முன்பெல்லாம் என்னை
யாரவது தொலைஞ்சு போனவனே
என்று திட்டும்போது
மூக்கின்மீது கோவம்வரும் எனக்கு

இப்போது யாரும்
அப்படி திட்டுவதில்லை
உண்மையில் இப்போதுதானே
தொலைந்து போனேன்
உன் காதலில்

ஏங்கி தவிக்கிறேன்
அப்படியாரவது திட்டினால்
மூக்கின் மீது வந்தமரும்
உன் காதலை காண்பிக்கவேண்டும்
என்பதற்க்காக

Advertisements

Read Full Post »

கிள்ளல்நீ அருகில் இருக்கும்போதெல்லாம்
நான் கவலை மறந்து போகிறேன்
நான் கவலையுறும் நேரமெல்லாம்
நீ அருகில் இருப்பது இல்லை

நீ கிள்ளி விளையாடுகிறாயா ?..
இல்லை மருந்துடுகிறாயா ?..
உன் ஒரு ஒரு கிள்ளளிலும்
என் ஒரு ஒரு நோவு தீர்க்கப்படுகிறது

ஒரு ஒரு முறையும் நீ என்னை
கிள்ளும்போதெல்லாம் நீ கிள்ளியஇடத்தில்
எனக்கு சிவக்கிறதோ இல்லையோ
வெட்க்கத்தால் உனக்கு கன்னங்கள்
சிவக்கிறது உன் கன்னம் சிவக்கும்
அழகைபார்ப்பதர்க்கே எத்தானைமுறை
வேண்டுமானாலும் நான் கிள்ளல் வாங்கலாம் 

கடைசியாக நீ கிள்ளிய
கிள்ளல்களில் மூன்று
ரத்தம் கண்ணிபோய் சுவடுகாளாக
காட்சி தருகிறது எனது வலது தொடையில்
அதில்
ஒன்று நீ
ஒன்று நான்
இன்னும் ஒன்று நம் காதல்

Read Full Post »

the_mechanic
ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன
உருக்கி ஊற்றிய உறைந்துவிட்ட தார் சாலையில்

சற்றே கணம் குறைந்த
இனும் சற்றே கணம் கூட்டப்பட்ட
இரண்டே சக்கரம் பொருத்திய
நன்கு சக்கரம் பொருத்திய
நாற்ப்பது சக்கரம் பொருத்தப்பட்டதுவரை

அதனுள்ளே எப்போது பார்த்தாலும்
வெறுமை சூழ்ந்த முகங்கள்
புன்னகைத்த முகங்கள்
வழியதிணித்த முகபாவங்களுடன்
என்னவென்றே அறியாத குழப்ப ரேகையுடன்
இன்னும் எராளமான முகபாவங்கள்

எந்திரமாய் மாறிவிட்ட நடமாடும் எந்திரங்களை
சுமந்து திரியும் எந்திரங்கள்
எல்லா எந்திரங்களும் அடிமைகள்தான்

எந்திரங்களுக்குள் இருக்கும் எந்திரங்களும்
யாரோ இனொரு எந்திரத்திற்கு அடிமையாய்
ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன
எந்திர பயணத்தில் எந்திர வாகனத்தில்
அடிமையாய் சுழலும் எந்திரவர்கம்

எல்லா எந்திரங்களும்
நடக்க ஓட சிரிக்க பேச கண்ணசைக்க
வென அனைத்தும் கட்டுப்படுத்தபட்டுள்ளன
எந்திரத்திற்கும் எந்திரமாய் மாறிவிட்ட
மனித எந்திரத்திற்கும் வித்தியசம்மில்லை

எல்லா எந்திரங்களும்
ஒரு நாள் ஓய்ந்துவிட்டால்
எந்திரத்தினுள் சிக்கிய மனிதஎந்திரம்
என்ன செய்யும் ?…

இனி மனித எந்திரத்திற்கு
யார் சொல்லி கொடுப்பார்கள்
பரஸ்பர அறிமுகத்தை
புன்னகையை
கோபத்தை
காதலை
ஸ்பரிசத்தை

Read Full Post »

untitled
உனது அலுவலகத்திற்கும்
பேருந்து நிறுத்தத்திற்கும்
இடையில் இடைவெளி ஒரு மைல்

நம் காதல் நடைபழகிய
உனக்கும் எனக்கும் இடையில்
இடைவெளி குறைத்த இடைவேளியது

நம் நடைபயண நேரம்
காதலின் படி குறைவு
காலத்தின் படி அதிகம்

இடைவெளி எப்போதும்
உறவுக்காகது என்பார்கள்
நம் காதல் நடைபழகியது
இடைவெளியில் தான்

பேருந்து வந்ததும் ஏறிசெல்லும்
பயணிபோல் என் இதயமேறி
சென்றுவிட்டாய் காதலில் இருந்து

அப்போது போலவே இப்போதும்
கவனிக்கிறார்கள் நமை கடந்தவர்கள்
நான் காதலுடன் பேசிசெல்வதை பார்த்து

உன் பாதத்தின் சுவடுகளை
என் இதயத்தில் பத்திரமாகஇருப்பதினால்
நானும் காதலும் அதே இடைவெளியில்
பயணிக்கிறோம் எப்போதும்
உடன்வரும் உன்நினைவுடன்

Read Full Post »

இதய வாசல்

 

நான் உன்னை போ போ
என்று சொல்லுவது
நீ என்னைவிட்டு போகவேண்டும்
என்பதற்க்காக அல்ல
என் இதயத்தினுள் போ போ
என்பதற்க்காக

என்னை மறக்க சொல்லுவது
ஒரே அடியாக மறந்துவிடுவதற்கு
அல்ல மறுபடியும் என்னை
நினைக்க செய்வதற்காக

உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்

உன்னை பார்க்காமலிருப்பது
தவிர்க்க வேண்டும் என்பதற்கல்ல
எப்போதும் உன் நினைவாலே
தவித்துகிடக்க வேண்டும் என்பதற்குத்தான்

கடைசியாக ஒன்று
என்னை காதலிக்கவேண்டம்
எண சொல்லுவது எதற்குதெரியுமா
உனக்கும் சேர்த்து நானே
காதலித்து கொள்கிறேன் என்பதற்க்காகதான்

Read Full Post »

5Fried%20Fish%20with%20Tamarind%20Sauce1
நீ பார்க்கும் போதெல்லாம்
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு

நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது

நீ சிரிக்கும் போதெல்லாம்
எனக்கு சந்தேகம்
உன் பற்கள் எல்லாம் மணியாக
இருக்குமோவென்று

காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை

நீ நடனம் ஆடுகிராய ?..
நடக்கிறாயா ?..
உன்னை பொறுத்தமட்டில்
என் வரையில் இரண்டுமே
ஒன்றுதான்

நீ என்ன வாசனைதிரவிய
தொழிற்சாலையா ?..
உன்னை கடக்கும் காற்றில்
வீசும் வாசத்தை வைத்துசொல்கிறேன்

Read Full Post »

g

உன் தோழிகளுடன்
பேசிக்கொண்டு இருப்பாய்
நானும் சற்றே எட்ட நின்று என்
தொழளர்களுடன் பேசிக்கொண்டு இருப்பேன்
உன்னை கானது போல்

இங்கே பாரடா

நான் இங்கேதானே இருக்கேன் என்று

உன் காதோரம் தலை நிவுவாய்
சரியாத உடையை சரிசெய்வதாக
செய்கைகள் புரிவாய்
என் கவனம் உன்மீது திரும்ப
இதற்கு பெயர் தான்
காதல்ஈர்ப்பு தீர்மனங்களோ…..!

Read Full Post »