Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2009

ice+cool

வீதி வழிபோகையில்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரிந்து
கை வீசி
கால் நடக்கும்
ஆண்மையாய்

என் எதிரில்
நீ வந்தால்

தலைகுனிந்து
பாதம் பார்த்து
உள்ளம்துடிக்க
உதடுகடித்து
இதயம் ஏங்கும்
உன் ஓர விழி
விழியம்பு என்னை
தைக்காதவென்று

Advertisements

Read Full Post »

love

காதல்வயப்பட்டவர்கள்
அனைவரும் சொல்லுகிறார்கள்
தான் காதலில் வீழ்ந்துவிட்டதாக

எப்போது வீழ்ந்தாலும் என்னை
மீட்டெடுப்பது காதல் பின்னெப்படி
சொல்லுவது நான் வீழ்ந்தேனென்று
வேண்டுமானால் காதலில் மீள்’தேன்னென்று
சொல்லிக்கொள்கிறேன்

காதலேன்னை சாய்த்துவிடுவதுதில்லை
மாறாக நான் துவண்டுவிடும்போதெல்லாம்
உன் மார்பில் சாய்த்து கொள்கிறது
நம் காதல் ஆறுதலாக

காதல் ஒரு சுறுக்குகயுறு என்கிறார்கள்
எனக்கு காதல் கொடிக்கம்பத்தில்
கட்டப்பட்டகயறு என்னை
எப்போதுமே உச்சியில் பறக்கவிடுகிறது

காதலித்தால் காதல்தவிரபிற
இயக்கம் மறந்துபோகுமேன்பார்கள்
என் வாழ்க்கை சக்கரம் சுழலுவதே
காதல் தரும் என்னையால்தான்

காதல் பார்த்து பாழாய்போனவர்
காதலில் வீழ்ந்து வீனாய்போனவர்
பலர்வுண்டு
காதலே காதலிக்கும் காதல்
நம்முடையாது

எல்லோரும் காதல் பிரிந்துவிட்டதென்று
என்றாவது ஒருநாள் சொல்லுகிறார்கள்
நாம் எப்படி சொல்லிகொள்ளுவது
ஒவொரு நாளும் இறுக்கமாக
பிணைத்துவைக்கிறது என்பதைதவிர

எல்லோருக்கும் எல்லாவயதினர்க்கும்
காதல் ” வந்து ” ” போகும் ” மென்பார்கள்
நமக்கு மட்டும் காதல்
நம்முடனே இருந்துவிடுகிறது ஒவொருநாளும்

Read Full Post »

alaguதன்னைத்தானே சுற்றிக்கொண்டு
சூரியனையும் சுற்ற
பூமிக்கு ஒரு ஆண்டு ஆகிறது
உன்னைமட்டுமே சுற்றும் எனக்கு
ஒரு ஆயுள்போதாது

உலகை சுற்றிவர
முப்பது நாட்கள்போதுமாம்
உன் அழகை சுற்றிவர
முன்னுறு ஆண்டுகள் வேண்டும்

நான் ஊர் சுற்றியல்ல
உன் அழகை சுற்றும்
அழகுசுற்றி

Read Full Post »

022my
நீரை எரிக்கவோ
மணலை திரிக்கவோ
நெருப்பை பணியாக்கவோ
காற்றை பிடிக்கவோ
ஆகாயத்தை அளக்கவோ
என்னால் முடியாது ……….

என்னால் முடிந்தது எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
உன் நினைவுடன்
வாழ்வது

Read Full Post »

grape-juice-1

புதைத்துவைத்த
பழரசம்
ஊற ஊற அதன்
சுவையும் மதிப்பும் கூடுமாம்

நானும் என்னை
புதைத்து வைத்திருக்கிறேன்
காதலிடம் – உன்
அன்பும் அரவணைப்பும்
அதிகம் வேண்டி

Read Full Post »

love_wallpaper_111நிலவை சுற்றவைக்கும்
பூமிக்கு நிலா சொந்தம்
பூமியை சுற்றவைக்கும்
சூரியனுக்கு பூமி சொந்தம்
இவை சூரிய குடும்பம்

என்னை
உன்பின்னால் சுற்றவைப்பதால்
நான் உனக்கு சொந்தம்
காதல்
உன்னை சுற்றவைப்பதல்
நீ காதலுக்கு சொந்தம்
நாம் காதல் குடும்பம்

Read Full Post »

CB029654

என்னை
அகராதி பிடித்தவன்
என்கின்றனர் எல்லோரும்
ஆமாம்
எனக்கு அகராதிதான்
பிடித்திருக்கிறது
என் அகராதியில் உள்ள
எல்லா வார்த்தைகளுக்கும்
அர்த்தம் ஒன்றே ஒன்றுதான்
” உனது பெயர் ”
பிறகெப்படி எனக்கு
அகராதி பிடிக்காமலிருக்கும்

Read Full Post »

Older Posts »