Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2009

இதனை தவிர என்னுடன்
நெருக்கம்கொண்டது அல்லது கொண்டவர்
எவரும் இல்லை

ஒரு சிறிய குழைவு
ஒரு சிறிய வளைவு
ஒரு சிறிய நடனம்
ஒரு சிறிய நளினம்
ஒரு சிறிய கணிவு
ஒரு சிறிய ஏக்கம்
என்னை பிரிகையில்
 
என் ஒரு ஒரு சிகரெட்டின்
போதும் வெளியேறும் புகை

Read Full Post »

நேர்மை
உண்மை
அர்ப்பணிப்பு
பொறுமை
காத்திருத்தல்
பொறுப்பு

நேற்று நடந்த என் நேர்முக தேர்வில்
என்னை நோக்கி வீசப்பட்ட
அர்த்தம் என்ன என்ற கேள்விகள்
மிக சுலபமாக கூறிவிட்டேன்
ஒரு வாக்கியத்தில்
“உனது காதல் என்று”

Read Full Post »

காதலியின் கைபிடிக்க
காத்திருக்கும் காதலனின்
சவரம் செய்யாத முகத்தில்
எட்டிப்பார்க்கும் நரை

நாற்பதை கடந்தும்
நாள்முழுக்க உழைத்தும்
சொந்தவீடுஒன்றை கட்ட
தவிக்கும் தலைவன் தலையில்
தான் வீட்டை கட்டிக்கொண்ட நரை

திண்னையில் சுருண்டுஇருக்கும்
சுருங்கிபோன தேகமெங்கும்
முளைத்திருக்கும் நரை

கவலைகள் வேறு வேறு
வலிகள் வேறு வேறு
துக்கங்கள் வேறு வேறு
நரையளவு வேறு வேறு

ஆனால்
முதிர்கன்னியின்
உச்சந்தலை சொல்லியது
அவள் கவலையின் விலையை
நரைகளாக

Read Full Post »

குண்டுதீய்த்த உடுப்பு
என் உறுப்பை காட்டுவதால்
இரண்டு கால் நாய்களின்
கிளர்ந்தெழுந்த உறுப்புகள்
எனைபுணர வருகிறது ………….

பிணம் புணரும் நாய்களினம்
எனை தீண்டுமுன்
உடுப்பு ஒன்று தாருங்கள் ….

காமமே கண்ணாக
கடமை முடிக்குமுன்
என் உடலை கருக்குங்கள்…

கன்னியாய் பிணமானேன்
கற்ப்பிழந்து புதைவேனோ
கண்ணிருந்தால் காப்பாற்றுங்கள்

Read Full Post »

பெண்ணொருத்தி அவசராமாய் ஏறிய
பேருந்தின் கம்பிஎட்டிப்பிடிக்கையில்
காமக்கன்னொன்று
ஜாக்கட்டை மீறி வெளிதேறிந்த
பாடி நாடவை உற்றுப்பார்ப்பதையுணர்ந்து
மிக அவசரமாய் கழுத்தோரம்
வழிந்தவியர்வையை கைகுட்டையால்
துடைப்பதைபோல் பதிவிசாய் சரிசெய்கையில்
காமக்கண் மனம் ஆடைஇழந்தது

Read Full Post »

வானத்தில் வட்டமிடும்
வாலறுந்த காற்றாடியாய்
காதலெனும் நூலறுந்து
திக்கற்று திசையற்று
திரிகிறேன்
நானும்
நீயும்
காதலும்
பிரிந்திருக்கிறோம்

இனி
உனக்கொரு வழி
எனக்கொரு வழி
உன் என்காதலும்
என் உன்காதலும்
எப்போதும் சந்திக்காதே

இனும் ஒருமுறை
போவதற்கு உயிரில்லை
இறந்த உயிருக்கும்
உன்னினைவை நினைக்கப்போதவில்லை

Read Full Post »

எனக்கான உன்னால்
வீசி எறியப்பட்ட
பார்வைகளின் சுவடுகளை
தேடி திரிகிறேன்
காற்றின் தீராபக்கங்களில்
அதன் மிச்சங்களிலவது
காதல் இருக்குமோவென்று

Read Full Post »

Older Posts »