Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘நட்பு’ பகுப்புக்கான தொகுப்பு

எத்தனையோ
எழுதிபார்க்கிறேன்
எழுதும் முயற்சியனைத்தும்
முழுமையடைகிறது
ஏறத்தாள …
காதலை பற்றி
தாய் தந்தை உறவைப்பற்றி
தேசத்தைப்பற்றி
அதன் பிரச்சினைகளைப்பற்றி
மக்களைப்பற்றி எல்லாம்
எழுதுகிறேன் என்னால்
நமது நட்ப்பைப்பற்றி
மட்டும் எழுத முடியவில்லை
எத்தனையோ முயற்சிகளுக்கு
பின்னாலும்
என்னுள் நீயும்
உன்னுள் நானும்
கலந்துவிட்டகாரனத்தால
காதலில் காமமுள்ளது
உறவில் எதிர்பார்புள்ளது
தேசத்தில் பற்றுள்ளது
மக்களைப்பற்றிய கவலையுள்ளது
ஆனால் நட்பே
உனக்கும் எனக்கும்
இடையில் ஒன்றும் இல்லை
சுவாசமாக நீ இருப்பதினால்
என்னவோ என்னால் நம்
நட்பைபற்றி மட்டும்
எழுதமுடியவில்லை

முழு பதிவையும் வாசிக்க »

ஒரு தட்டில் சோறு
ஒரு பாயில் படுக்கை
ஒரே கலரில் மேல் சட்டை
ஒரு சிகரெட்டில் பாதி
இப்படி இருந்தோம்
உனக்கு காய்ச்சல் வந்தால்
முதலில் வேர்ப்பது எனக்கு
எனக்கு வேலை கிடைக்கவேண்டும்
என்று வேண்டிய நாட்களை விட
உனக்கு முதலில் கிடைக்கவேண்டும்
என்று வேண்டிய நாட்கள் அதிகம்
இரண்டாம் ஆட்டம் சினிமா
பார்த்து விட்டு திரும்பும்போது
மௌனமாய் இருக்கும் தெருக்களில்
நமது கும்மாளம் மட்டுமே கேட்கும்
அந்த பின்னிரவுகளில்
பழகிய நாட்களின் சுகங்களை
விட பிரிந்த நாட்களின்
சுமை அதிகம் அழுத்துகிறது
நீ படும் கஷ்டங்களை எண்ணி

முழு பதிவையும் வாசிக்க »

கன்னி உன் கண்ணில்
கருவிழி கொண்டாயோ
காந்தம் கொண்டாயோ
காந்த பார்வையால் காவர்கிறாய்
கண்விச்சில் கொல்லுகிறாய்
காதலனை இனம் காணவா இந்த
கண்வீச்சை கட்டிளம்
காளையர் மீது வீசுகிறாய்
கடைக்கண் பார்வையிலே
காளையர் நெஞ்சங்கள் உன்
காலடியில் விழும் என்பது நிச்சியம்
காதல் வரவில்லை எனக்கு
காய்ச்சல் தான் வந்தது நட்புடன்
கவிதையும் வந்தது உனக்காக
காதலாக அல்ல நடப்பாக ………..
காலம் முடியும் வரை தொடரும்
காதலை விட வலிமையான நட்புடன்

முழு பதிவையும் வாசிக்க »

என் இதயத்தில் நட்புக்கான
பக்கங்கள் எழுதபடமேலே
இருக்கின்றன சில பக்கங்கள்
அன்பாலும் சில பக்கங்கள் காதலாலும்
சில பக்கங்கள் வேசத்தலும்
இனும் சில பக்கங்கள் துரோகத்தாலும்
நிரப்பப்பட்டுள்ளன நட்புக்கான பக்கங்கள்
மட்டும் உன் நல் வரவை
எதிர் பார்த்துதனோ என்னவோ
இத்தனை நாட்களாக கத்து கிடந்தது

முழு பதிவையும் வாசிக்க »

யோசித்து யோசித்து பார்கிறேன்
உன்னை வாசிக்க நேசிக்க
தயங்கி தயங்கி
நிற்கிறது இதயம்
சுவாசிக்க சொல்லுகிறது
நுரையிரல்
நேசிக்கவ சுவசிக்கவ உன் நட்பை

முழு பதிவையும் வாசிக்க »