எனகொன்றும் காணமல் போகும் வயதல்ல
நீ ஒன்றும் பிள்ளை பிடிப்பவளும் அல்ல
இருந்தும் நான் தொலைந்து போனேன்
உன் காதலால்
வலி என்றதும்
கண்பட்டுவிட்டதேன்று
சுற்றிபோட்டார்கள் என் அம்மா
உன் கண் படவில்லை என்பதால்
வந்த வலி என்பதையறியாமல்
உன் காதல் கொடுத்த
நோயினால் நான் உளறுகிறேன்
கேட்பவர்கள் கவிதை என்கிறார்கள்
எதையெதையோ விரும்புகிறாய்
உன்னை விரும்பும் எனை
மறந்து
உன் காதலுக்கு ஓய்வே கிடையாத
கேட்கிறார்கள் பலர்
கண்ணில் இருந்தால் தூங்கும் போது
ஓய்வெடுக்கும் என்றுதானே
என் இதயத்தில் வைத்திருக்கிறேன்
உன் நிழல் சிந்திப்போன
காதல் கண்டுதான் நான் வந்திருக்கிறேன்
யாசகம் கேட்டு
என்னோடு வா
உயிர்வாழ வேண்டும்
இதுவரை எதுவெல்லாம்
எனது உரிமையாக பட்டதோ அதுவெல்லாம்
உன் காதல் வந்ததும் அன்னியாமாய் போனது



எதையெதையோ விரும்புகிறாய்
உன்னை விரும்பும் எனை
மறந்து really super da…..
good poem