இரவெல்லாம் பனிபெய்தததை
அதிகாலை புல்லின் நுனி காட்டிகொடுப்பதைபோல்
என் முகம் காட்டிகொடுத்து விடுகிறது
முந்தய இரவின் கனவில் நீ வந்ததை
நீ கனவில் வந்துவிடுவாயே
என்றுதான் இப்போதெல்லாம்
சீக்கிரமே உறங்கசெல்கிறேன்
உனக்கெப்படி தெரியும்
நான் உறங்கசெல்வது
மழையோ புயலோ
எப்படியும் நீ கனவில் வந்துவிடுகிறாய்
எனக்குத்தான் காய்ச்சல் வந்துவிடும்
அடுத்தநாள் கனவில்
நீ வராமல் போய்விடுவாயோ என்று
இப்படி இரவில் வருகிறாயே
உனக்கு பயம் வருவதில்லையா ?
எனக்கு தான் பயம்கிடையாதே என்கிறாயா
சரிதான் தேவதைகளுக்கு பயமா
ஒரு ஒரு நாளும் புது புது
விளையாட்டுகளை சொல்லிதருகிறாய்
இரவெல்லாம் கனவில் என்னுடன்
விளையாடுகிறாய்
பகலில் உறங்கிவிடுவாயோ ?
நீ கனவில் வருகிறாயா?
நேரில் வருகிறாயா ?
உறக்கம் விழித்து முகம் பார்த்தால்
முகமெல்லாம் [...]
நவம்பர், 2009 க்கான தொகுப்பு
கனவு
Posted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, குறிச்சொல் இடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 26/11/2009 | 1 மறுமொழி »
திருமணம்
Posted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, குறிச்சொல் இடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 11/11/2009 | 1 மறுமொழி »
இத்தனை நாட்களாக
யாருக்கும் தெரியாமல் இருந்தது
நான் கவிதை திருடுவது
நான் எழுதும் கவிதை எல்லாம்
உன்னை சுட்டுவதாக
உனக்கு தெரியும்வரை
நான் திருடிகொண்ட கவிதைகள்
எல்லாம் உன்னுடையவை
இவை என்கவிதைகள் – அல்ல
உன் கவிதைகள்
மலரை உரசிசெல்லும் காற்று
அதன் வாசத்தை திருடிசெல்வதைபோல்
என் மனதை உரசி சென்ற உன்னை
திருடி எழுதப்பட்டவைதான் என் (உன்) கவிதைகள்
இருவருமே திருடர்கள் தான்
நீ என் இதயத்தை திருட
நான் உன்னை கவிதைகளாக திருட
இந்த திருட்டு குற்றத்திற்கு
காதல் வன்இனிமை சட்டத்தில்
ஆயுள் தண்டனையாக திருமணமாம்
உன் என் காதலிடமும்
என் உன் காதலிடமும்
தண்டனையை விரைந்து நிறைவேற்ற
காதல் ஆணை பிறப்பித்து உள்ளதாம்
நீ திருடிகொண்ட ” [...]
முத்தம்
Posted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, குறிச்சொல் இடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 06/11/2009 | Leave a Comment »
மழை நாளில் நீ தந்த
முதல் முத்தம் இன்னமும்
ஈராமாய் என் நெஞ்சில்
உன் முத்தத்திற்கு
இனிப்பு சுவை எங்கிருந்து வருகிறது
எத்தனை முத்தங்கள்
பெற்றாலும் திகட்டுவதே இல்லை
உன் உதடு எதில்
ஊறியது ..? நிச்சியம்
தேனுக்கு இந்தசுவை இல்லை
நீ முத்தம் பதிக்கும்
போதெல்லாம் என் ஆயுள்ரேகை
மாற்றியமைக்கப்படுகிறது
முத்தத்திற்கு சத்தம்
இருக்கிறதோ இல்லையோ
சக்தி இருக்கிறது சாப்பாடே தேவையில்லை
ஒரு ஒரு நொடிக்கும்
ஒரு முத்தம் தந்துவிடு
எனக்கு மணி பார்க்கதெரியாது
இழப்பின்றி இனிமைதரும்
பேராயுதம் உன் முத்தம்
என்னை மௌனமாக்கிவிடுகிறது
இது சிறிய முத்தம் என்று
கன்னத்தில் குடுப்பாய்
கிரங்கிபோய்விடுவேன்
பெரியமுத்தம் என்று ஐயோ போ …
முத்தம் தந்துவிட்டு
இயல்பாய் இருக்கிறாய் நீ
வாங்கிக்கொண்ட நான்தான் தடுமாறிதிரிகிறேன்
மது ஒருபோதும்
அடைத்து வைத்திருப்பதை
ஆடசெய்வதில்லை
உன் [...]
