
பாலுணர்வு தூண்டல்களில்
பற்றிஎரிந்து பாழாய்போகிறது
இளசுகளின் இளம் நெஞ்சம்
வரவேற்ப்பு அறை வரை
வந்துவிட்டது வக்கிரம்
அதன் பராக்கிரமம் பற்றி
அக்கறை இல்லை எவருக்கும்
கல்வி நிலையங்கள்
கல்வி பயிலவா ?.. இல்லை
காமம் பயிலவா ?..
காமத்தை சந்தைப்படுத்த
இதைவிட வேறு நல்ல இடம் இன்று ஏது ?..
வினாடிகள் வீனாய்கரைய
நிமிடங்கள் நித்திரையில்
மணிகள் மரணத்தில் – கடைசியில்
நாட்கள் நாசமாய் போகிறது
யாருக்குமே புரிவதில்லை
நாசாமாய் போன நாட்கள்
வீனாய் போன வினாடிகளில்
பிறந்து அழிந்தன என்று
காம சந்தையில் விலைகொடுத்தவனால்
காலத்தை எந்த சந்தையிலும் திரும்பபெற
முடிவதேயில்லை
சமூக கிளர்சியடையவேண்டிய வயதில்
சதை கிளர்ச்சியடைந்து
கடைசியில் சுற்றிதிரிகிறார்கள்
காயடித்த நாய்களைபோல்
கல்லாய் கூட பயனற்று…

சமுதாயத்தின் மூஞ்சிலடித்தார் போல் ஒரு கவிதை(அறை?!).பிரமாதம், பாராட்ட வார்த்தைகளிலில்லை! “எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான் கவிதைகளுக்கு” மத்தியில் ஒரு “குறிஞ்சிப் பூ”!
பகிர்வுக்கு மிக்க நன்றி இதயத்திருடன்.உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு வணக்கம்