நீ இளைப்பாற
இடம் வேண்டுமென்று
படைக்கப்பட்டதுதான்
என் இதயம்
இடம் வேண்டுமென்று
படைக்கப்பட்டதுதான்
என் இதயம்
என் இதயம்
உன்னைப்பற்றிய
நினைவுகளை மட்டும்
வடிகட்டி என் நரம்புகளுக்கு
அனுப்பிவைக்கிறது
உன் விழிப்பார்வை
தீண்டும்போதெல்லாம்
என் இதயம்
தடுமாறித்தான் போகிறது
உன் காதல்
ஈர்ப்பு விசைதான்
என் இதயத்தின்
உந்துசக்தி
என் இதயம்
உன் பெயரை உச்சரித்தல்
உறைந்துவிடும்
அடுத்தமுறை உச்சரித்தால்
உருகிவிடும்
என் இதயம்
வலது இடது
என்று இருகூறுகளாக
படைக்கப்பட்டதல்ல
ஒரே கூறு அதில்
நீ மட்டும்தான்
