02/01/2010 இதயத்திருடன் ஆல்
கத்தி கையில் வைத்திருந்தால்
ஒரு கை பார்த்து விடுவேன்
நீ கண்ணில் அல்லவா வைத்திருக்கிறாய்
காதலை சொல்லவரும்போதேல்லாம்
உன் கண்ணின் கூர்மையால்
என் இதயத்தை காயமுறசெய்கிறாய்
கத்திக்கு உறை இருப்பதுபோல்
உன் கண்களுக்கு
கண் மை
ஈட்டி எறிவது
ஒருவகை விளையாட்டு
நீ கண்ணால் எறிகிறாயே
அது எந்த வகை ?..
நுழைய அனுமதியில்லாத பகுதிகளுக்கு
பாதுகாப்பு பலமாய் இருக்கும்
உன் இதயமுமா அனுமதி மறுக்கப்பட்ட இடம்
கண்கள் கத்தி வைத்து
காவல் காக்கிறதே
ஏழு மலை
ஏழு கடல் தாண்டி அசுரனின் உயிர்
பாதுகாப்பாய் இருக்குமாம்
என் காதலுக்கு உன் இதயம் தான் சரி
உன் கண்களை தாண்டி
என் காதலை யாரென்ன செய்துவிட முடியும் ?..
என் காதலை
கனவிலாவது பத்திரபடுத்திகொள்
உன் கண்களை தாண்டி வர அப்போதாவது
முடிகிறதா என்று பார்க்கலாம்
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | Leave a Comment »
23/12/2009 இதயத்திருடன் ஆல்
மெய்,
வாய்,
கண்,
மூக்கு,
செவி
எனும் ஐம்புலன்கள் மனிதனாகபிறந்த
ஒருஒருவருக்கும்
யூதனுக்கு மட்டும் ஆறாம்
ஜெருசலத்தையும் சேர்த்து
உன்னையும்
உன் நினைவுகளையும்
சேர்த்து எழு புலன்கள் எனக்கு
நமக்கு நாம்
வாழும் ஜென்மங்கள் ஏழு….
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | Leave a Comment »
01/12/2009 இதயத்திருடன் ஆல்

அதுஎன்ன
கண்களா ?.. தூண்டில்களா ?..
என்னை எப்போதும் வம்பு இழுக்கிறது
***********************
நீ என்னை தாண்டி
செல்லும்போதெல்லாம்
உன் கண்கள் என்னை
தீண்டி செல்லும்
அப்போது என்னிடம் பேசி செல்லும்
************************
கயல் விழியோ
மான் விழியோ
நகைக்கும் உன் விழி பார்த்தால்
நான் மயங்கி போவது உன் இடம்தான்
**************************
கடைக்கண் பார்வையெல்லாம் தேவையில்லை
நீ கண் திறந்து என்னை
பார்ப்பதாக நினைத்துகொண்டாலே
போதை தலைஏறிவிடுகிறது
**************************
கண்கள்
பேசும்
சிரிக்கும்
வெட்கப்படும்
போதையூட்டும்
இவற்றுடன்
உன் கண்களுக்கு தான்
இதயத்தை காயப்படுத்தி
காயத்திற்கு மருந்திடவும் தெரிகிறது
**************************
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | Leave a Comment »
26/11/2009 இதயத்திருடன் ஆல்

இரவெல்லாம் பனிபெய்தததை
அதிகாலை புல்லின் நுனி காட்டிகொடுப்பதைபோல்
என் முகம் காட்டிகொடுத்து விடுகிறது
முந்தய இரவின் கனவில் நீ வந்ததை
நீ கனவில் வந்துவிடுவாயே
என்றுதான் இப்போதெல்லாம்
சீக்கிரமே உறங்கசெல்கிறேன்
உனக்கெப்படி தெரியும்
நான் உறங்கசெல்வது
மழையோ புயலோ
எப்படியும் நீ கனவில் வந்துவிடுகிறாய்
எனக்குத்தான் காய்ச்சல் வந்துவிடும்
அடுத்தநாள் கனவில்
நீ வராமல் போய்விடுவாயோ என்று
இப்படி இரவில் வருகிறாயே
உனக்கு பயம் வருவதில்லையா ?
எனக்கு தான் பயம்கிடையாதே என்கிறாயா
சரிதான் தேவதைகளுக்கு பயமா
ஒரு ஒரு நாளும் புது புது
விளையாட்டுகளை சொல்லிதருகிறாய்
இரவெல்லாம் கனவில் என்னுடன்
விளையாடுகிறாய்
பகலில் உறங்கிவிடுவாயோ ?
நீ கனவில் வருகிறாயா?
நேரில் வருகிறாயா ?
உறக்கம் விழித்து முகம் பார்த்தால்
முகமெல்லாம் முத்தக்கரைகள்
விழிமூடியவுடன் வந்து
விழிமுழிக்குமுன் செல்வதெப்படி
எனக்கு சொல்லிகொடேன்
நானும் உன்கனவில் வந்துபார்க்கிறேன்
தேவதை கனவுஎப்படி என்று
அதிகாலை கனவு பலிக்குமேன்பார்கள்
அதனால் தானே
கனவில் ஒரு கனவை காட்டி செல்கிறாய்
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | 2 மறுமொழிகள் »
11/11/2009 இதயத்திருடன் ஆல்

இத்தனை நாட்களாக
யாருக்கும் தெரியாமல் இருந்தது
நான் கவிதை திருடுவது
நான் எழுதும் கவிதை எல்லாம்
உன்னை சுட்டுவதாக
உனக்கு தெரியும்வரை
நான் திருடிகொண்ட கவிதைகள்
எல்லாம் உன்னுடையவை
இவை என்கவிதைகள் – அல்ல
உன் கவிதைகள்
மலரை உரசிசெல்லும் காற்று
அதன் வாசத்தை திருடிசெல்வதைபோல்
என் மனதை உரசி சென்ற உன்னை
திருடி எழுதப்பட்டவைதான் என் (உன்) கவிதைகள்
இருவருமே திருடர்கள் தான்
நீ என் இதயத்தை திருட
நான் உன்னை கவிதைகளாக திருட
இந்த திருட்டு குற்றத்திற்கு
காதல் வன்இனிமை சட்டத்தில்
ஆயுள் தண்டனையாக திருமணமாம்
உன் என் காதலிடமும்
என் உன் காதலிடமும்
தண்டனையை விரைந்து நிறைவேற்ற
காதல் ஆணை பிறப்பித்து உள்ளதாம்
நீ திருடிகொண்ட ” என் மனமும் “
நான் திருடிகொண்ட ” உன் மனமும் “
இனைவாதல் இதுதான் உண்மையில்
” திரு”மணம்
…
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | 1 மறுமொழி »
06/11/2009 இதயத்திருடன் ஆல்

மழை நாளில் நீ தந்த
முதல் முத்தம் இன்னமும்
ஈராமாய் என் நெஞ்சில்
உன் முத்தத்திற்கு
இனிப்பு சுவை எங்கிருந்து வருகிறது
எத்தனை முத்தங்கள்
பெற்றாலும் திகட்டுவதே இல்லை
உன் உதடு எதில்
ஊறியது ..? நிச்சியம்
தேனுக்கு இந்தசுவை இல்லை
நீ முத்தம் பதிக்கும்
போதெல்லாம் என் ஆயுள்ரேகை
மாற்றியமைக்கப்படுகிறது
முத்தத்திற்கு சத்தம்
இருக்கிறதோ இல்லையோ
சக்தி இருக்கிறது சாப்பாடே தேவையில்லை
ஒரு ஒரு நொடிக்கும்
ஒரு முத்தம் தந்துவிடு
எனக்கு மணி பார்க்கதெரியாது
இழப்பின்றி இனிமைதரும்
பேராயுதம் உன் முத்தம்
என்னை மௌனமாக்கிவிடுகிறது
இது சிறிய முத்தம் என்று
கன்னத்தில் குடுப்பாய்
கிரங்கிபோய்விடுவேன்
பெரியமுத்தம் என்று ஐயோ போ …
முத்தம் தந்துவிட்டு
இயல்பாய் இருக்கிறாய் நீ
வாங்கிக்கொண்ட நான்தான் தடுமாறிதிரிகிறேன்
மது ஒருபோதும்
அடைத்து வைத்திருப்பதை
ஆடசெய்வதில்லை
உன் உதடுகளும் தான்
முத்தத்தை அடைத்து வைத்துக்கொண்டு
எத்தனை அடக்கம் காட்டுகிறது பார்
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | Leave a Comment »
26/10/2009 இதயத்திருடன் ஆல்

யாரையும் திரும்பி பார்க்கவைக்கும்
அழகிகளை பார்த்திருக்கிறேன்
பார்க்கவைத்துக்கொண்டே இருக்கும் அழகி நீ
பெயரளவில் அழகிகளை பார்த்ததுண்டு
உன்னைப்போல் பேரழகியை பார்த்தது
இதுதான் முதல்முறை
அழகாய் இருக்கின்றன
என்றுகூறும் அனைத்தும்
உன்னைப்போல் அழகில்லை
ஒருவேளை நீ மட்டும்தான் அழகோ என்னவோ
எழுத்துகள் கூட உன்னைசேர்ந்தவுடன்
அழகாய் மாறியமாயம் உன் அழகிற்கேவுண்டு
உன் பெயர்எழுத்தில் உள்ள
எழுத்துக்களையெல்லாம் தனியாக
எழுதிப்பார் உனக்கே புரியும்
அழகு புத்துணர்வு தரும்
உன்னைபார்த்தபின் நான்
கண்ட உண்மை
எல்லாவற்றிக்கும் வரையறையுண்டு
உன் அழகிற்கு மட்டும்
எந்த வரையறையுமில்லை
உன் அழகிற்கு அருகில்
எந்த அழகைகொண்டுவந்தாலும்
அழகில்லாமல் போய்விடுகிறது
உன்னை நான் காதலிப்பதலோ
என்னவோ என் காதல்கூட
அழகாய் தெரிவதில்லையனக்கு
அத்தனை அழகாய்
ஒரு அழகு நீ
என் எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | 1 மறுமொழி »
26/10/2009 இதயத்திருடன் ஆல்
உன் இதயத்தை
தொடத்தான் முடியவில்லை
திருடகூடவா முடியாது ?…
நீ என்னைபார்க்கும்
போதெல்லாம்
இமைகள் கருப்புக்கொடி
காட்டுகின்றன
சிப்பியிலே
இருக்கும்வரை முத்தின் மதிப்பு
தெரியாது உனக்கு முத்துப்பல்லாமே
எப்போது புன்னகைப்பாய் ?..
மூக்கின்மீது கோவத்தை
கொண்டுவரதே அதுகூட காயப்படும்
அத்தனை கூர்மை
தேன்னூரும் அல்ல அல்ல
கவிதையூறும் உதடுகள்
ஒவ்வொரு சுழிப்பும்
ஓராயிரம் கவிதைக்கு சமம்
எவன் வைத்தான்
பூனை முடியென்று
பொன்முடி காதுமடலருகில்
யாருக்குஎப்படியோ
உனக்கு ஆள்காட்டிவிரல் உன்
ஆள் நான்னென காட்டத்தான்
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | Leave a Comment »
23/10/2009 இதயத்திருடன் ஆல்

பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது
**********
என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றேனக்கும் தயக்கம்
**********
உடைந்து போன உன் வளையல்கூட
பொக்கிஷம் தான் எனக்கு
நீ உடைத்த என் இதயம்
உணகெப்படியோ
**********
நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது
*********
வெட்டி
வெட்டி போட்டாலும்
மீண்டும்
மீண்டும் முளைக்கிறது
உன் மீதான என் காதல்
உன் தயக்கமும் அப்படித்தானோ
**********
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது
*********
என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்
**********
இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
நம் காதல ? உன் தயக்கமா ?
பந்தய பொருள் என் வாழ்க்கை
*********
வெட்கம் என்றால்
களைந்து விடுவேன் – இது
தயக்கம் அல்லவா தவிக்கிறேன்
தவிர்ப்பது எப்படியென்று
*******
-இதயதிருடன்
காதல் கவிதை / Kadhal Kavithaikal இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | 2 மறுமொழிகள் »
22/10/2009 இதயத்திருடன் ஆல்

பாலுணர்வு தூண்டல்களில்
பற்றிஎரிந்து பாழாய்போகிறது
இளசுகளின் இளம் நெஞ்சம்
வரவேற்ப்பு அறை வரை
வந்துவிட்டது வக்கிரம்
அதன் பராக்கிரமம் பற்றி
அக்கறை இல்லை எவருக்கும்
கல்வி நிலையங்கள்
கல்வி பயிலவா ?.. இல்லை
காமம் பயிலவா ?..
காமத்தை சந்தைப்படுத்த
இதைவிட வேறு நல்ல இடம் இன்று ஏது ?..
வினாடிகள் வீனாய்கரைய
நிமிடங்கள் நித்திரையில்
மணிகள் மரணத்தில் – கடைசியில்
நாட்கள் நாசமாய் போகிறது
யாருக்குமே புரிவதில்லை
நாசாமாய் போன நாட்கள்
வீனாய் போன வினாடிகளில்
பிறந்து அழிந்தன என்று
காம சந்தையில் விலைகொடுத்தவனால்
காலத்தை எந்த சந்தையிலும் திரும்பபெற
முடிவதேயில்லை
சமூக கிளர்சியடையவேண்டிய வயதில்
சதை கிளர்ச்சியடைந்து
கடைசியில் சுற்றிதிரிகிறார்கள்
காயடித்த நாய்களைபோல்
கல்லாய் கூட பயனற்று…
என் எண்ணங்கள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் | 3 மறுமொழிகள் »